search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடி உதை"

    வேலூர் தோட்டப்பாளையத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

    சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

    சமயபுரம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 3 பேருக்கு உருட்டு கட்டை அடி விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மண்ணச்சநல்லூர்:

    சமயபுரம் அருகே சிறுகனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட குமுளூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருக்கும் இவரது உறவினரான மதலை ராஜ்சுக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த மதலைராஜ் மற்றும் அவரது மனைவி சமுத்திரமேரி, மதலை ராஜியின் தம்பி லாசர் அவரது மனைவி சுகிர்தா, லாசரின் மகன்ஜெகன் ஜென்னிஸ் மற்றும் சுதாகர் ,பிரகாஷ், ஜாய் ஆகியோர் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன்  பாண்டியராஜன் வீட்டிற்குள் சென்று அங்குள்ள பொருட்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 

    இதை பாண்டியராஜன் அவரது மனைவி சலோமியா மேரி, இவர்களது மகன் லியோ ஆகிய 3 பேர் தட்டிகேட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மதலைராஜ் குடும்பத்தினர் உருட்டுகட்டையால் பாண்டியராஜன், சலோமியாமேரி, லியோ ஆகியோரை சராமாரியாக தாக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மதலை ராஜ் குடும்பத்தினர் சென்று விட்டனர். 

    இதில் படுகாயம் அடைந்த பாண்டியராஜன் குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×